FAQ

common types of plasticcommon types of plasticcommon types of plasticcommon types of plasticcommon types of plasticcommon types of plasticcommon types of plastic

பொதுவாக மலேசியாவில் மறுசுழற்சி செய்யப்படும் நெகிழிகள்
  • வகை 1; பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET)
  • வகை 2; உயர் அடர்த்தி பாலிஎதிலீன் (HDPE) மற்றும்
  • வகை 5; பாலிப்ரோப்பிலீன் (பிபி).
மலேசியாவில், பெரும்பாலான ஒரே பொருளாலான நெகிழிகள் மறுசுழற்சி செய்யப்படலாம். இருப்பினும், பொருளாதார அளவீடு, பல அடுக்குகள் ‘லேமினேட்’ செய்யப்பட்ட நிலை போன்ற காரணங்களால் பல பொருளாலான நெகிழிகள் / கலப்பு நெகிழிகள் மறுசுழற்சிக்குச் சவாலாக இருக்கலாம்.

நெகிழிகள் தயாரிப்பில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கோண அம்புக்குறியில் குறிப்பிடப்பட்ட எண் (குறியீடு) மூலம் நெகிழிகளின் வகைகள் அடையாளம் காணப்படுகின்றன. ஒவ்வொரு நெகிழிகள் பொருளின் இரசாயன தயாரிப்பைப் பற்றிய தெளிவை வழங்குவதற்காகக் குறியீடுகள் அனைத்துலக அளவில் ஒப்புக் கொள்ளப்படுகின்றன, ஆனால் அத்தயாரிப்பின் மறுசுழற்சிக்கு உத்தரவாதம் அளிக்காது.
முக்கோண அம்புக்குறி பொதுவாக ஒரு நெகிழி கொள்கலனின் அடிப்பகுதியில் காணப்படும். வெவ்வேறு குறியீடுகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, FAQ #1 ஐப் பார்க்கவும்
identify the types of plastic

மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை நாம் சுத்தம் செய்து உலர்த்துவது மாசுபாட்டைக் குறைத்து மறுசுழற்சி விகிதத்தை அதிகரிக்கும். சுத்தம் செய்யாமல் மறுசுழற்சி செய்வது, கூடுதல் துப்புரவு முயற்சிக்கும் தேவைப்படும் வசதிகளுக்கான செலவுகளுக்கும் வழிவகுக்கும்.
வெவ்வேறு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைச் சுத்தம் செய்து உலர்த்துவதற்கான சில பரிந்துரைகள் இங்கே:
நெகிழி கொள்கலன்கள் அல்லது பொட்டலங்கள் மற்றும் அலுமினியத் தகடு:
  1. உள்ளடக்கங்களைக் காலி செய்து, உணவு மிச்சம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  2. கொள்கலன் மற்றும் பொட்டலங்களின் வெளிப்பகுதியையும் உள்பகுதியையும் தண்ணீருடனும் சோப்புடன் கழுவவும்.
  3. அவற்றை உலர்த்தவும்

கண்ணாடி சாடிகளுக்கும் புட்டிகளுக்கும்:
  1. சாடி மற்றும்/அல்லது புட்டியைக் காலி செய்து உணவு மிச்சம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். முடிந்தால், அதன் மேலுள்ள தாளைக் கிழித்து விடுங்கள்.
  2. மேலுள்ள தாளைக் கிழிப்பது கடினமாக இருந்தால், பேக்கிங் சோடா மற்றும் எண்ணெயைச் சம விகிதத்தில் சேர்த்துப் கலவையாகக் கலக்கவும்.
  3. அத்தாளில் கலவையைத் தடவி, இரவு முழுவதும் விட்டுவிடவும்.
  4. கலவையையும் தாளையும் துடைக்கவும்.
  5. சாடி மற்றும் / அல்லது புட்டியை அளசவும்.

பொதுவான மறுசுழற்சி தொட்டிகள்மலேசியாவில் மிகவும் பொதுவான மறுசுழற்சி தொட்டிகள்
  1. நெகிழி
  2. தின்
  3. காகிதம்
  4. கண்ணாடி

சிறப்புத் தொட்டிகள்கரிம கழிவுகள், மின்னணுக் கழிவுகள், ஆடைகள் போன்ற பிற கழிவுகளைச் சேகரிக்க சிறப்புத் தொட்டிகள் உள்ளன. பெட்ரோல் நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அமைந்துள்ள € œcharity bins இவற்றிற்கான சில எடுத்துக்காட்டுகளாகும்
மறுசுழற்சி தொட்டிகள் மற்றும் சிறப்புத் தொட்டிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, நாம் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை முறையாகச் சுத்தம் செய்து பிரிக்க வேண்டும்.

திடக்கழிவுகள், திரவக் கழிவுகள், கரிமக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் மற்றும் மறுபயன்பாடுகள் & மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் என 5 வகையாக கழிவுகளை வகைப்படுத்தலாம்.

பின்வருபவை மலேசியாவிலுள்ள மக்கள் மற்றும் சமூகத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த உதவுகின்ற சில சமூகக் குழுக்கள்
மலேசியாவில் கழிவில்லமையின் வரைபடம்மறுசுழற்சி மையங்கள் (பொது மற்றும் சிறப்புத் தொட்டிகள்), பழுதுபார்க்கும் கடைகள், மொத்தக் கடைகள், போன்ற உங்களைச் சுற்றியுள்ள கழிவு இல்லாமை இடங்களைக் கண்டறிய உங்களின் ஒரு நிறுத்தக் கோப்பகம்.
பழுது - சுயமாகச் செய்துகொள்வோர்பழுதுபார்க்கும் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், ஒத்துழைக்கவும் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளை வழங்கவும் உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சமூகம்.
சுழற்சிக்கு முன் சமூகம் - எதுவும் வாங்காமை திட்டம்புவியியல் அடிப்படையிலான முகநூல் குழுக்கள், அண்டை பகுதிகளில் உள்ள சமூக உறுப்பினர்களுக்கு நல்ல நிலையில் உள்ள பொருட்களை இலவசமாக வழங்க அனுமதிக்கின்றன. Beli Nothingஅல்லது Buy Nothing போன்ற கடவுச் சொல்களின் மூலம் உங்கள் சமூகத்தில் ஒருவரைக் கண்டறிந்து முகநூல் வாயிலாக உங்கள் பகுதியைத் தொடருங்கள்.எதுவும் வாங்காமை திட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கு & பெட்டாலிங் ஜெயா
இடமாற்று திட்டம்புதிய ஆடைகளை வாங்குவதைக் குறைப்பதற்கும், கவனத்துடன் நுகர்வுப் பயிற்சி செய்வதற்கும், சமூக உறுப்பினர்களுக்கான ஆடைகளை மாற்றுவதற்கான தளம்.

மொபியஸ் லூப் என அழைக்கப்படும் உலகளாவிய மறுசுழற்சி சின்னம், ஒரு பொருளின் பொட்டலம் மறுசுழற்சி செய்யப்படலாம் என்பதைக் குறிக்கிறது என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது சேகரிக்கவோ முடியாது
கலப்பு பொருட்கள் கொண்ட தயாரிப்புகளுக்குத் தற்போது உங்கள் இருப்பிடத்தில் கிடைக்காத குறிப்பிட்ட மறுசுழற்சி வசதிகள் தேவை. ஒவ்வொரு தயாரிப்பின் மறுசுழற்சித் திறனைத் தீர்மானிக்க, நாம் இன்னும் நெகிழி வகைகளை (FAQ #1 ஐப் பார்க்கவும்) அல்லது ட்ராஷ்பீடியாவில் உள்ள பிற குப்பைப் பொருட்களைப் பார்க்க வேண்டும்.

டிராஷ்பீடியாவில் உள்ள பொருட்களின் மறுசுழற்சித் திறன், ட்ராஷ்பீடியாவின் உள்ளடக்கத்திற்கு பங்களித்த கிளாங் பள்ளத்தாக்கில் (மலேசியா) நாங்கள் பணிபுரியும் கூட்டாளர்களின் பொதுவான மறுசுழற்சி நடைமுறைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது.
மறுசுழற்சி சேகரிப்பு அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் புவியியல் முழுவதும் வேறுபடுவதால், குறிப்பாக வெவ்வேறு நாடுகளில், உங்கள் உள்ளூர் மறுசுழற்சி சேகரிப்பாளர் மறுசுழற்சி செய்வதற்கு வெவ்வேறு பொருட்களை ஏற்றுக்கொள்ளலாம். எனவே, மறுசுழற்சி சேகரிப்பு பற்றிய துல்லியமான மற்றும் தற்காலத் தகவல்களுக்கு உங்கள் உள்ளூர் மறுசுழற்சி மையங்களை நேரடியாகச் சரிபார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.
உங்கள் உள்ளூர் சேகரிப்பாளர்களுடன் நாங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால், தயங்காமல் எங்களுக்கு எழுதுங்கள்

மறுசுழற்சிக்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க, அதன் பொருட்களைப் புரிந்துகொள்ள தயாரிப்பு லேபிளைப் படிக்கவும். குறிப்பிட்ட குப்பைப் பொருளின் மறுசுழற்சித் திறன் குறித்து உங்கள் உள்ளூர் சேகரிப்பு மையங்களைச் சரிபார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.

சீரோ வேஸ்ட் மலேசியா அனைவருக்கும் நிலையான வாழ்வை அணுகக்கூடியதாக மாற்ற முயற்சிக்கிறது. ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக, உங்கள் நன்கொடையானது இதைச் செய்வதற்கு எங்களுக்கு நிறைய உதவுகிறது. ஜீரோ வேஸ்ட் மலேசியாவின் பணியை ஆதரிக்க, தயங்காமல் பங்களிக்கவும் இங்கு
அனுசரனைக்கும், மானியங்கள் அல்லது கூடுதல் ஆதரவுக்கும், தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும் info@zerowastemalaysia.org.

ஆம், ட்ராஷ்பீடியா இணையதளத்தை அதிகமானோர் பயன்படுத்துவதையும் மறுசுழற்சி மற்றும் நிலையான வாழ்க்கை பற்றி பொதுவாக மேலும் அறிந்துகொள்வதையும் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். எங்கள் QR குறியீடுகளையும் சுவரொட்டிகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். புகைப்படம் எடுத்து உங்கள் சமூக ஊடக கணக்குகளில் எங்களைக் குறியிடவும்!இங்கே பதிவிறக்கவும்

ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை விசாரணைகளுக்கு, மின்னஞ்சல் அனுப்பவும் info@zerowastemalaysia.org